சகோதரரிடமிருந்து…

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே

… நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். மாற்கு 16 : 15

என்ற வாக்கின் படி இந்த நமது சேனல் மும்பையிலிருந்து உலகமெங்கும் வெப் டிவிகளிலும், மொபைல்போன் டிவிகளிலும், கேபிள் டிவிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது! இந்த சேனல் நிகழ்ச்சிகளை தரமானதாக தயாரித்து வழங்க முயர்ச்சிகள் எடுத்து செயல்பட்டு வருகிறோம்! உலகமெங்குமுள்ள தமிழ் மற்றும் ஹிந்தி பேசும் மக்கள் மும்பையில் ஆண்டவர் செய்யும் நன்மைகளை அறிந்துகொண்டு ஆண்டவரைத் துதிக்கவும், ஆசீர்வதிக்கப்படவும் ஜெபித்து செயல்பட்டு வருகிறோம்.

இந்த எமது வெப்சைட்டை பார்க்கும் நீங்கள் உங்களுடைய கருத்துக்களையும் நீங்கள் பெற்றுவரும் ஆசீர்வாதங்களையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்களுடைய உற்சாக வார்த்தைகளைக் கேட்க ஆவலாயிருக்கிறோம்!

எமது சேனலின் நிகழ்ச்சி நிரல் செடியுல் விரைவில் வெளியிடப்படும் எல்லா நிகழ்ச்சிகளையும் கண்டு ஆசீர்வதிக்கப்படுங்கள்!

(ரோம 15:33) சமாதானத்தின் தேவன் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. ஆமென்.

இப்படிக்கு ஆண்டவருடைய பணியில்

உங்கள் அன்பு சகோதரர் இரா.சுந்தர்

+91 9323693249

sundar@goodnewstime.tv